Sunday, October 26, 2008

"தீபாவளி " நல் வாழ்த்துக்கள் !





வலைப்பூ உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த தீபாவளிநல்வாழ்த்துக்கள் . ! எல்லா வளமும் பெற்று வாழ அனைவரையும்வாழ்த்துகிறேன் .

Sunday, September 7, 2008

ரஜினியின் ''எந்திரன்'' இன்று தொடக்கம்!


ரஜினிக்கு 'குசேலன்' தோல்வி, பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. ரஜினி படமே என்றாலும் கதை மற்றும் இன்ன பிற விஷயங்களிலும் கூடுதல் கவனம் தேவை என்பதை இயக்குனர்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.

இதன் எதிரொலிதான், ஷங்கரின் 'ரோபோ' தற்போது 'எந்திரன்'' என பெயர் மாறியதும். 'ரோபோ' ஆங்கில பெயர் என்பதால் வரிச்சலுகை கிடைக்காது. ரஜினி படத்துக்கு வரிச்சலுகை தேவையில்லை என்றாலும், பயம் யாரை விட்டது.

படம் திரைக்கு வந்து, முடிவு எதிர்மறையாகிவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் தான் இந்த பெயர் மாற்றத்தை செய்திருக்கிறார்கள்.

னினும், 'சிவாஜி'க்கு 'தி பாஸ்' என்று சப்-டைட்டில் வைத்ததுபோல, எந்திரனுக்கு சப்டைட்டிலாக 'தி ரோபோ' என்று வைத்துள்ளனர். இதுவும் கூட கடைசிநேர மாறுதலுக்கு உட்பட்டதாம்.

இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து, 'எந்திரன்' படப்பிடிப்பு பிரேசலில் இன்று தொடங்குகிறது. முதலில் பாடல் காட்சிகளை படம் பிடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர்.

(மூலம் - வெப்துனியா)

Tuesday, September 2, 2008

வீர தளபதி ஜே.கே .ரித்தீஷின் அடுத்த படம் "தில்லு முல்லு"!


'நாயகன்' படத்தின் எதிர்பாராதவெற்றியில் இருந்துமீளாமல் இருக்கும் ஜே.கே.ரித்தீஷ், சூட்டோடு சூடாக அனல் பறக்கும் சில பதிட்டங்களை வகுத்து வருகிறார்.

அதில் ஒன்றுதான், ரஜினி பாணியை பின்பற்றி ரசிகர்கள் எண்ணிக்கையை பலமடங்காக உயர்த்துவது எனபதும்!

ஆம், மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த 'நாயகன்' படத்தின் தலைப்பை பயன்படுத்திய ரித்தீஷ், அடுத்து பயன்படுத்தவிருப்பது ரஜினி படத தலைப்பு.

இதற்கென ரித்தீஷ் தேர்ந்தெடுத்திருப்பது, கே.பாலச்சந்திரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படமான 'தில்லு முல்லு'!

இதோடு நிற்கவில்லை இந்த வீரத்தளபதி (அப்படிதாங்க பட விளம்பரங்கள்ல போடுறாங்க!), இந்த முறை ரஜினியின் மேனரிசங்களையும், ஸ்டைல்களையும் பயன்படுத்தப் போகிறார் என்கிறது அவரது அலுவலக (!!!) வட்டாரம்.

வீரத்தளபதி என்ற அடைமொழி, தில்லுமுல்லுவில் 'டூப்பர் ஸ்டார்' என மாறினாலும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஆச்சரியப்படுவதற்கில்லை!
(மூலம் - வெப்துனியா)

Sunday, July 13, 2008

சேரனின் ஆட்டோகிராபின் 2ம் பாகம் ''பொக்கிஷம்''


'ஆட்டோகிராபி'ன் 2ம் பாகமாக தயாராகிவருகிறது 'பொக்கிஷம்'.

னது திருமண வாழ்க்கையின் ஞாபக பொக்கிஷங்களை சேரன் திரும்பி பார்ப்பதே கதை.

'ஆட்டோகிராபு'க்கு பிறகு, பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்காத நிலையில், அதன் 2ம் பாகமான 'பொக்கிஷம்' மூலம் வெற்றியை தக்கவைத்து கொள்வதற்காக படத்தை பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறார் சேரன்.

முந்தைய படத்தில் நடித்த கோபிகாவும், சினேகாவும் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட, தற்போது பத்மப்ரியாவும், 'கண்ணும் கண்ணும்' உதயதாராவும் சேரனின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

(மூலம் - வெப்துனியா)

Sunday, June 15, 2008

" தசாவதாரம்' ஓபனிங் சூப்பர் ''தியேட்டர் முதலாளிகள்


"கமலஹாசனின் தசாவதாரம்", ஓபனிங் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நான்கு நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டதால், சென்னையில் நேற்று அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல்.மு‌ன்பதிவு செய்ய வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு திரையரங்கிலும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். தடியடி நடத்த வேண்டிய அளவுக்கு பெரும் கூட்டம்."சென்னையில் மட்டும் 21 தியேட்டர்ல தசாவதாரம் ரிலீஸாயிகியிருக்கு. அப்படியும் கூட்டத்துக்கு குறைவில்லை. அமேசிங் ஓபனிங். ஆறு நாட்களுக்கான ரிசர்வேஷன் ஏற்கனவே முடிஞ்சிருச்சி" என்றார் சென்னை கமலா திரையரங்கு உரிமையாளர் வள்ளியப்பன். "சும்மா வந்துபோற நடிகர்களுக்கிடையில் கமலின் உழைப்பும் நடிப்பும் பிரமிக்க வைக்குது. இதில் வில்லனாக வர்ற வெள்ளைக்கார கமலைப் பாருங்க. எந்த இடத்திலாவது கமலோட ஜாடை, மேனரிஸம் ஏதாவது தெரியுதா? உண்மையிலேயே ஃபென்டாஸ்டிக் மூவி" என்றார் வள்ளியப்பன்.வெளியே நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது, தமிழ் சினிமா சரித்திரத்தில் தசாவதாரம் சாதனை படைக்கும் என்ற அவரது வார்த்தை உண்மையாகும் என்றே தோன்றியது.
(மூலம் - வெப்துனியா

Wednesday, June 11, 2008

பெட்ரோல் விலை உயர்வினை கிண்டல் செய்து கார்ட்டூன்கள்



பெட்ரோல் விலை உயர்வினை கிண்டல் செய்து திரு "மதி" அவர்களின் கார்ட்டூன் கும்மி . அவசியம் பாருங்கள்

Sunday, June 8, 2008

"சினிமா நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்"

ரஜினிகாந்த் , கமலா ஹசன் உட்பட சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கென்று தனியாக இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த தளங்களில் அந்தந்த நட்சத்திரங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. உங்கள் அபிமான நட்சத்திரங்களின் இணைய தள முகவரிகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.(நன்றி தினமலர் )









நடிகர்கள்










ரஜினிகாந்த்
http://www.rajinikanth.com





சூர்யா
http://www.rssurya.com





விஜய்
http://www.actorvijayonline.com





அப்பாஸ்
http://www.actorabbas.com





விஜயகாந்த்
http://www.indiadirect.com/captain





சரத்குமார்
http://www.rskworld.com





அர்ஜூன்
http://arjun.fanspace.com





பிரபு
http://www.sivaji-prabhu.com





மாதவன்
http://www.rmadhavan.com





விக்ரம்
http://www.chiyaanvikramonline.com





பிரசாந்த்
http://www.prashanthonthenet.com





ஜீவா
http://www.jeeva-online.com/











நடிகைகள்












சிம்ரன்
http://www.simplysimran.com





சினேகா
http://www.priyamudansneha.com





அபிராமி
http://www.abhiramionline.com





ஐஸ்வர்யாராய்
http://www.aishwarya-rai.com





கிரண்
http://www.kiranontheweb.com





லைலா
http://www.laila.net





மீனா
http://www.meenaonthenet.com





ஜோதிகா
http://www.jothikaonline.com





சங்கவி
http://www.sangavi.com





ஸ்வேதா
http://www.swatheonline.com





ஷாலினி
http://www.shalinionline.com





மும்தாஜ்
http://www.mumtazonline.com





ரீமாசென்
http://www.reemasen.com





அசின்
http://www.asinonline.com





ஷெரீன்
http://www.ilamaisherin.com





நமீதா
http://www.namitha.info





மதுமிதா
http://www.madhumitha.com





நிலா
http://www.liveindia.com/meera











இசையமைப்பாளர்கள்












ஹாரிஸ் ஜெயராஜ்
http://www.harrisjayaraj.com/





ஏ.ஆர்.ரஹ்மான்
http://www.arr4music.com/





வித்யாசாகர்
http://vidyasagar.fateback.com/bio.htm











இயக்குனர்கள்












ஷங்கர்
www.directorshankar.com/





பாலா
www.directorbala.com/
நன்றி தினமலர்

Saturday, June 7, 2008

மதுரையில் சுழன்றது சூறாவளி : நொறுங்கியது பள்ளி


மதுரையில் நேற்றுமுன்தினம், சுழன்றடித்த சூறாவளிக் காற்றில் 60 வயது மரம் விழுந்து பள்ளிக் கட்டடம் நொறுங்கியது. பள்ளி முடிந்த நேரம் என்பதால், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பினர். மதுரை ஐராவதநல்லூர் ஆர்.சி., துவக்கப்பள்ளியில் 300 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்றுமுன்தினம் மாலையில் திடீரென பலத்த காற்று வீசியது. சுழன்றடித்த சூறாவளிக்கு சில வீடுகளில் ஓடுகள் பறந்தன. மரங்கள் ஆங்காங்கே முறிந்துவிழுந்தன. ஆர்.சி., பள்ளியின் வளாகத்தில் நின்றிருந்த, 2 வாகை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் ஒரு மரம் கட்டடத்தின் மீது விழுந்து, 3 வகுப்பறைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. மாலை 5 மணிக்கு சம்பவம் நடந்ததால், மாணவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் உயிர்தப்பினர்.நேற்று முன்தினம் முதல், மாணவர்கள் வளாகத்தில் உள்ள சர்ச் மற்றும் மர நிழல்களில் பாடம் படிக்கின்றனர்.

தாளாளர் பாதிரியார் சிப்ரியான் கூறுகையில், "பள்ளி மாலை 4.05மணிக்கு முடிந்துவிட்டது. கடவுள் கிருபையால் சம்பவம் நடந்தபோது, மாணவர்கள் யாரும் வகுப்பில் இல்லாதது அதிர்ஷ்டமே. 2 நிமிடங்களே சுழன்றடித்த காற்றில், இந்த வளாகத்தில் மட்டுமல்ல அருகில் பல மரங்கள் முறிந்துவிழுந்துள்ளன. பக்கத்து வயலில், 27 தென்னை மரங்களும் முறிந்துவிட்டன. சேதம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்' என்றார்.


நன்றி தினமலர்

Wednesday, June 4, 2008

"ரஜினியின் குசேலன் செப்டம்பரில் ரிலீஸ்


கடந்த வாரம் வெளியான பத்திரிகைச் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது, பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் 'குசேலன்' படமும், கமலின் 'தசாவதாரமும்' ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி, போட்டி போடுகின்றன என்பதுதான். ஆனால், 'தசாவதாரம்' வரும் 13ம் தேதி ரிலீஸ் ஆகி, போட்டியில் முந்திக் கொண்டுள்ளது. 'குசேலன்' படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தாலும், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராவதால், ரிலீஸ் ஆக இன்னும் இரு மாதங்கள் ஆகும். படப்பிடிப்புகள் முடிய ஜூலை ஆகிவிடும் என்ற நிலையில், போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முடிந்து திரைக்குவர செப்டம்பர் ஆகிவிடும் என தகவல்கள் கசிந்துள்ளன.

Tuesday, June 3, 2008

"விரைவில் 'ரோபோ'வுக்கு பூஜை!"


வெகு பிரமாண்டமாக பேசப்பட்டாலும் 'சிவாஜி', தி 'லாஸ்' ஆன விவகாரத்தில் ரொம்பவே அப்செட் ஆகியிருந்தார் ஷங்கர். இதனால், 'ரோபோ'வை தனது லட்சியப் படமாக எடுத்துக்காட்ட முடிவு செய்துள்ளார். தற்போது, கதை விவாதம் முடிந்து ஸ்கிரிப்ட்டும் ரெடியாகிவிட்டதால், படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார் ஷங்கர். மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள படபூஜையில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார்கள் பங்கேற்கின்றனர். கதை, பிரமாண்டம், தொழிற்நுட்பம், கிராபிக்ஸ் கலக்கல் என எல்லா விதத்திலும் 'சிவாஜி'யை மிஞ்சும் வகையில் இருக்குமாம் 'ரோபோ'.பூஜை முடிந்ததும், ஒட்டு மொத்த படக்குழுவும் படப்பிடிப்புக்காக அமெரிக்கா பறக்கிறது.

Monday, May 26, 2008

ஜூன் 20 இல் ரஜினிகாந்தின் குசேலன் ஆடியோ ரிலீஸ்


ரஜினி மட்டுமல்ல, அவரை வைத்து ஆரம்பிக்கிற படங்களும்கூட மின்னல் வேகத்தில் நடந்து முடிந்துவிடும். அவ்வளவு ஸ்பீடு.'குசேலன்' படப்பிடிப்பு நேற்றுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் படத்தின் பெரும்பாலான காட்சிகளை மளமளவென முடித்து, வரும் 20ம் தேதி ஆடியோ ரிலீஸ் வரை வந்துவிட்டார் இயக்குனர் வாசு. ஜூன் ஆரம்பத்தில் கேரளாவில் ஒரு பாடல் காட்சி. ஜூன் 3 லிருந்து 15ம் தேதி வரை ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் ஷூட்டிங். அவ்வளவு தான் ஷூட்டிங் ஓவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படம் தயாராவதால், காலையில் சென்னையிலும், மாலையில ஹைதராபாத்திலும் குசேலன் ஆடியோ ரிலீஸ் ஆகிறது. இரண்டு நிகழ்ச்சிக்கும் விழா நாயகர் சாட்சாத், ரஜினியேதான்!

Wednesday, May 21, 2008

மீண்டும் கதாநாயகனாகிறார் "வடிவேலு"!


''இந்திரலோகத்தில் அழகப்பன்'' புகட்டிய பாடத்தால், கதாநாயகனாக இனி வலம் வர வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த வடிவேலுவை, ஒரு கதை புரட்டிப் போட்டு மீண்டும் நாயகனாக்கியுள்ளது. குறிப்பாக அவர் கேட்ட கதையில் வரும் கதாப்பாத்திரம் அவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. தனக்கெனவே படைத்த பாத்திரமாகவே கருதியிருக்கிறார். ஒரு தொழில்முறை கொலைக்காரனுக்கு, தான் எதைத் தொட்டாலும் தனக்கே 'ஆப்பு' ஆகிவிடும் நிலை தொடர்கிறது. இதுவே, அக்கதாப்பாத்திரத்திலுள்ள தனித்துவம்! 'மாயாவதி மாரிசன்' தொலைக்காட்சித் தொடரை இயக்கிய ராஜூ ஈஸ்வரன்தான், இந்தச் சிரிப்பு கொலைக்காரனை உருவாக்கியவர்.இப்படத்தை, திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தயாரிக்கிறார்.

Tuesday, May 20, 2008

ரஜினிகாந்தின் 'இருபதுக்கு இருபது'!


இது 'இருபதுக்கு இருபது' சீசன் போலும்... ரஜினிகாந்துக்கும் ஐபிஎல்-லுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருக்கும் 'இருபதுக்கு இருபது'க்கும் தொடர்பு உண்டு. ரஜினிகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'குசேலன்' படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. "சினிமா சினிமா சினிமாதான், எம்ஜிஆரு, சிவாஜி சாரு, என்டிஆரு, ராஜ்குமாரு வந்ததிந்த சினிமாதான்..." என்று தொடங்கும் வாலி எழுதிய ரஜினியின் அறிமுக பாடல், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், ரஜினிக்கு எஞ்சியுள்ள நயன்தாராவுடனான டூயட் பாடல் கேரள மாநிலம் ஆலப்புழையில் அடுத்த வாரம் எடுக்கப்படவுள்ளது. இங்கேதான் 'இருபதுக்கு இருபது' விஷயம் ஆரம்பமாகிறது. "ஓம் ஸாரிரே ஸாரே ஸாரே, போக்கிரிராஜா பொல்லாதவன் நீதான் ஸாரே ஸாரே..." என்று தொடங்கும் பாடலில் 20 வித கெட்டப்புக்களில் ரஜினி நடிக்கிறார். இந்தப் பாடலில், ரஜினி நடித்த 20 படங்களின் தலைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே 'இருபதுக்கு இருபது'! குசேலனை ஜூலை 15-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Monday, May 19, 2008

"செந்தமிழும் நாப்பழக்கம் " முழுப்பாட்டும் தெரியுமா ? உங்களுக்காக முழுப்பாட்டும் !!

"சித்திரமும்
கைப்பழக்கம் ;

செந்தமிழும் நாப்பழக்கம்,
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்:
நித்தமும் நடையும் நடை ப்பழக்கம்,
தானம் , தயை , நட்பு , பிறவி
குணப்பழக்கம் .!"


இப்பாட்டுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாம் !
நாம் நினைக்கும் அர்த்தத்தை விட ஆழ்ந்த அர்த்தம் கொண்டது இந்த பாட்டு !

Thursday, May 15, 2008

தசாவதாரம் : நீதிமன்றத்தில் வெளியான ''ரகசியங்கள்''! உங்களுக்காக


''தசாவதாரம்'' படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே, அப்படத்தைப் பற்றிய பல ரகசியங்கள் காக்கப்பட்டு வந்தன. அதில், சிலவற்றை நீதிமன்றத்தின் வாயிலாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்டுள்ளார்; தணிக்கைக்குழுவும் தன் பங்குக்கு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்தில் உள்ள பல காட்சிகள் வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளன என்று `இன்டர் நேஷனல் ஸ்ரீவைஷ்ணவ தர்மா சம்ரக்ஷணா' சங்க தலைவர் கோவிந்த ராமானுஜதாசர், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள காட்சிகளை, இப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ராஜசூர்யா, சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய தணிக்கை குழுவும், இந்தப் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் தனித்தனியாக பதில் மனுவை தாக்கல் செய்தனர். கே.எஸ்.ரவிக்குமார் தனது மனுவில், "12-ம் நூற்றாண்டு வரலாற்றில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள்தான் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசு வெளியிட்ட வரலாற்று புத்தகங்கள் அடிப்படையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, `பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி-2', `தமிழ்நாட்டு வரலாறு, சோழ பெருவேந்தர் காலம்' ஆகிய புத்தகங்களில் உள்ள கருத்துக்கள் அடிப்படையில்தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமானுஜரை, ஸ்ரீரங்கநாதர் சிலையோடு சேர்த்து கட்டி கடலில் தள்ளிவிடுவது போன்ற காட்சி இருப்பதாக கூறுவது தவறு. `தசாவதாரம்' என்ற பெயர் காப்புரிமை கொண்ட பெயரல்ல. இந்த பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை.கமலஹாசன், வைஷ்ணவர் பாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணுவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வது போன்ற காட்சி அமைந்துள்ளன. `ஓம்' என்ற மந்திரத்தின் மீது நடிகர் கமலஹாசன் கால் வைத்து ஏறுவது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் பகவத் கீதை' புத்தகத்தின் மேல் கால் வைத்து ஏறுவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற காட்சிகள் அமையவில்லை.மேலும், சைவர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல் இருப்பது போலவும் காட்சிகளை தயாரிக்கவில்லை. ராமானுஜசாரியார் கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடிக்கவில்லை. மேலும், இந்த படம் ஸ்ரீரங்கநாதர் அல்லது ஸ்ரீரங்கம் கோவில் கதை கொண்டதல்ல. ஆகவே, இந்த படத்தில் உள்ள எந்த காட்சியையும் நீக்க தேவையில்லை.பல வைஷ்ணவ நண்பர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். கடவுள் விஷ்ணுவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆகவே, இந்த படத்தை முழுமையாக திரையிட அனுமதிக்க வேண்டும்.மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦மத்திய தணிக்கை குழு அதிகாரி பாபு ராமசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், இப்படத்தில் கமலஹாசன் ராமானுஜர் வேடத்தில் நடிக்கவில்லை. ராமானுஜரின் உண்மையான சிஷ்யரான ரங்கராஜன் நம்பி வேடத்தில் அவர் நடித்து, குரு பக்திக்காக தியாகம் செய்வதாக கதை அமைந்துள்ளது.மேலும், சிதம்பரம் கோவிலில் உள்ள கோவிந்தராஜர் சிலையை அகற்ற முயன்றபோது அரசரின் வீரர்களோடு சண்டைபோடுவது போன்ற காட்சி அமைந்துள்ளது. ஆகவே, இந்த படம் எந்த வகையிலும் மத உணர்வை பாதிக்கும் வகையிலோ, மோதலை ஏற்படுத்தும் வகையிலோ அமையவில்லை. இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அப்படியிருக்க, அதற்கு முன்பாகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆகவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இறுதியில், இந்த வழக்கு விசாரணையை வரும் 20-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்!

Tuesday, April 29, 2008

எனது 'சூப்பர் மேன்' கதைக்கேற்றவர் சூர்யா : மிஷ்கின்


ன்னிடமுள்ள 'சூப்பர் மேன்' வகையறா கதைக்கு மிகவும் பொருத்தமானவர் சூர்யாதான் என்று உறுதியாகச் சொல்கிறார் மிஷ்கின். 'அஞ்சாதே' வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'நந்தலாலா' படத்தை இயக்கி, நடித்துக்கொண்டிருக்கும் மிஷ்கின், சூப்பர் மேன் கதையை உருவாக்கி, தயாராக வைத்துள்ளார். இதில், சூப்பர் மேனாக சூர்யாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தவண்ணம் உள்ளன. சூப்பர் மேன் கதை உதித்தவுடன் தன் மனதில் தோனிறவர் சூர்யாதான் என்று கூறும் மிஷ்கின், தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் இப்படம் அமையும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறார்.

மணிரத்னமா, ஷங்கரா? : குழப்பத்தில் ஐஸ்வர்யா ராய்!


ஷங்கர் இயக்கும் ரஜினியின் 'ரோபோ'வுக்கு கால்ஷீட் தருவதா? அல்லது மணிரத்னம் இயக்கும் அபிஷேக்கின் படத்துக்கு தேதிகளை ஒதுக்கீடு செய்வதா..?இத்தகைய குழப்பம் மிகுந்த சூழலில் திணறி வருகிறார், நடிகை ஐஸ்வர்யா ராய்! இவ்விரு படங்களின் படப்படிப்புகளுமே செப்டம்பரில் தொடங்கவுள்ளது. இவற்றில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதால், ஐஸ்வர்யா ராய் மிகுந்த குழப்பத்தில் உள்ளார். தன்னை சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் பக்கம் சாய்வதா அல்லது, தன்னை எட்டாவது உலக அதிசயமாக்கி, 'ஜீன்ஸ்'சுடன் வலம் வரச் செய்த ஷங்கருக்கு கடைக்கண் பார்வையை செலுத்துவதா?'குரு'வுக்குப் பிறகு மணியின் இயக்கத்தில் மீண்டும் கணவர் அபிஷேக்குடன் ஜோடி சேர வேண்டும் (தமிழில் விக்ரமுடன்) என்ற அவாவும் உண்டு. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆவலால் 'ரோபோ'வை வசப்படுத்த வேண்டும் என்ற ஆசையுமுண்டு.இந்தச் சூழலில் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவே முடிவு மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஐஸ், 'ரோபோ' படத்துக்கே முன்னுரிமை கொடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மணி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு தீபிகா படுகோனேக்குச் செல்லவிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளன. ஆனால், இரு பெரும் வாய்ப்புகளையும் நழுவவிட விரும்பாத ஐஸ், தேதிகளில் சரிசெய்ய வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து மணி, ஷங்கர் ஆகிய இருவரிடமும் பேச திட்டமிட்டுள்ளாராம்!

Monday, April 28, 2008

நீல ரத்னக்கல்லில் உலகின் மிகச்சிறிய குரான்

துபாய்: நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரான் வடிவமைக்கப்பட்டுள்ளது.விலை உயர்ந்த நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரானை மிர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.10,000 குரான் வாசகங்கள் இந்த குரானில் பொறிக்கப்பட்டுள்ளன. 58 மி.மீ. அகலமும், 98 மி.மீ. உயரமும் கொண்ட 20 நீல ரத்னக்கல் பட்டிகளில் இந்த வாசகங்கள் வெண்தங்கம் என்றழைக்கப்படும் பிளாட்டினம் உலோகத்தால் எழுதப்பட்டுள்ளன.துபாயில் கடந்த ஏப்ரல் 23 முதல் 26 வரை நடந்த நகை கண்காட்சியில் இந்த குரான்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் விலை தலா 15,000 தினார்களாகும்.இது பற்றி மிர் எண்டர்பிரைசஸ் நிர்வாக மேலாளர் டாக்டர் மிர் மொக்தாரி கூறுகையில், 'மெக்கா' (MEQA - Micro Engineering of Quran as Art) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ரத்னக்கல் குரானை தயாரிக்க 2 வருடங்கள் பிடித்தன.குரான் வாசகங்கள் விரல்களில் பட்டு சேதமடையாமல் இருக்கும் வகையில் அதன்மீது குவார்ட்ஸ் இழை பூச்சு அமைக்கப்பட்டுள்ளது.குரானின் புனிதம் பாதுகாக்கப்படும்வகையில், மிக குறைந்த அளவிலேயே இந்த ரத்னக்கல் குரான்கள் தயாரிக்கப்பட்டன.திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை போற்றும் நினைவுப்பரிசாக இந்த குரான்களை வாங்கி வழங்கலாம் என்றார்.இந்த குரான்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிலுள்ள வாசகங்களை படிப்பதற்கு வசதியாக பூதக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Friday, April 25, 2008

புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் சங்க காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் முருகன் கோயில் ஒன்றின் இடிபாடுகளை இந்திய அகழ்வாரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மகாபலிபுரத்துக்கு வடக்கே சாலாவான் குப்பம் என்னும் இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த ஆய்வாளர்கள் அங்கு சுனாமி தாக்குதலுக்கு பின்னர் மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து காணப்பட்ட ஒரு கல்வெட்டை கண்டுள்ளனர்.

அகழ்வு வேலைகள் தொடருகின்றன
அகழ்வு வேலைகள் தொடருகின்றன
அதில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு படையெடுத்து வந்து, ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் அங்கிருந்த ஒரு கோயிலுக்கு மானியங்கள் வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது.

அதனை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய போது, அந்தப் பகுதிக்கு அருகிலே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு முருகன் ஆலயத்தைக் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அகழ்வுப் பணியில் மும்முரம்
அகழ்வுப் பணியில் மும்முரம்
ஆனால் ஆய்வுகளை அவர்கள் தொடர்ந்த போது, அந்த கோயிலின் அடியில் மேலும் மண்ணில் புதைந்த நிலையில் மற்றொமொரு கோயிலும் காணப்பட்டுள்ளது.

அதாவது முதலில் பல்லவர்களால் சங்க காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில், சுனாமி அலைகளால் சேதமடையவே, அதன் மீது மீண்டும் மற்றுமொரு கோயில் பின்னர் ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறுகிறார் சென்னை அகழ்வாராய்ச்சித் துறையைச் சேர்ந்த டி. சத்யமூர்த்தி அவர்கள்.

மீட்கப்பட்ட சில தூண்கள்
மீட்கப்பட்ட சில தூண்கள்
பின்னர் இரண்டாவது கோயிலும்(மேலே இருந்த கோயில்) சுனாமியால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கோயில் கி.மு 2வது நூற்றாண்டுக்கும் கி.பி முதலாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்வதாகவும் சத்யமூர்த்தி கூறினார்.

Tuesday, April 22, 2008

பவர் கட் இல்லாத குஜராத் மாநிலம்



குஜராத் கிராமங்களில் மின்தடையே இல்லை: மோடி திட்டம் முழு வெற்றி
ஏப்ரல் 22,2008,01:10

ஆமதாபாத்:குஜராத் மாநில கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சார வினி யோகம் கிடைக்கிறது; இதனால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது; தொழில், வியாபாரம் அதிக அளவில் நடக்கிறது. இது மட்டுமல்ல, நகரங்களில் இருந்து கிராமத்துக்கு மீண்டும் திரும்பு வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராமங்களில் முழு அளவில் மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில்,'ஜோதி கிராம் யோஜனா' என்ற திட்டத்தை, ஆயிரம் கோடி ரூபாய் செலவில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துவங்கி உள்ளார். மின்சார வினியோகத்தை சீரமைப் பது, பழுதில்லாமல் பராமரிப்பது, திருட்டை தடுப்பது ஆகியவை தான் இந்த திட்டத் தின் முக்கிய அம்சங்கள். இதன்படி, 18 ஆயிரம் கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மின்சார வினியோகம் தரப்பட்டு வருகிறது. எல்லா கிராமங்களிலும் மின்சார வசதி களும் செய்யப்பட்டுள்ளன.இதனால், கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருகிறது. குடிசைத்தொழிலாக செய்யப்படும் வைரம் பட்டை தீட்டப்படும் தொழிலை, மீண்டும் கிராமங்களில் செய்ய ஆரம்பித்து விட்டனர்.கிராம மாண வர்களின் கல்வித்திறன் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சாரம் இருப்பதால் அவர் களால் படிக்க முடிகிறது. சிறு தொழில்களும் அதிகரித்து வருகின்றன. மின்சாரம் திருட்டுப் போவதும், வீணாவதும் வெகுவாக குறைந்துள்ளது. அதனால், மின்சார வினியோகத்தில் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது.நகரங்களில், மின்சார வினியோகம் இருக்கிறதுஎன்று போனவர்கள் பலரும் இப்போது மீண்டும் கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 'கிராமங்களுக்கு மின்சார சப்ளை செய்யும் திட்டம் முழு அளவில் வெற்றி அடைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் கிராமங்களில் மின் சப்ளை சரிவர செயல்படாத நிலையில் இங்கு 1மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்படுகிறது' என்று அதிகாரிகள் கூறினர்.


நன்றி

தினமலர்

Monday, April 21, 2008

புதிர்கள்- ரயில் பயணத்தில் கவனிக்க மறந்தது !




ரயிலில் நமது இருக்கைக்கு எதிரே உள்ள இருக்கை காலியாக இருந்தால் அனைவரும் செய்யும் காரியம் என்ன ?




நாம் பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரமாக நின்றும் பஸ் வரவில்லை என்றால் என்ன அர்த்தம் தெரியுமா ?




நமது நகரில் டூ வீலர் ஓட்டுபவர்களின் மானசீக குரு யார் ?




விடைகள்






எவ்வளவு பெரிய ஜென்டில் மேனகா இருந்தாலும் அவர் அந்த சீட்டில் காலை தூக்கி வைப்பார் ( கால் பக்கத்தில் யார் இருந்தாலும் கவலை பட மாட்டார் )




அடுத்து வருவது தனியார் பஸ் ஆக இருக்கும் ( வெயிட் பண்ணியது பண்ணினோம் கூட ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணினால் அடுத்து ஒரு கவர்மண்ட் பஸ் காலியாக வரும் )




தனியார் பஸ் ஓட்டுபவர்கள் தான் ! ( அவர்கள் ஹாரன் அடித்தவுடன் யாராக இருந்தாலும் விலகி ஓடி விட வேண்டும் )






Sunday, April 20, 2008

பூச்சாண்டி விஜயகாந்த் .

பூச்சாண்டி விஜயகாந்த் !!!!!!!!!!!



சிறுவர்கள் இதனை பார்த்து பயந்து விட்டால் உடனே கோவிலுக்கு அழைத்து சென்று திரு நீறு பூசவும்.

அழகர் ஆற்றில் இறங்கினார்.






ஏப்ரல் இருபதாம் தேதியான இன்று கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் சரியாக காலைஏழு மணி ஐந்து நிமிடத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் . பக்தர்கள் லட்சகணக்கில் கண்டு மகிழ்ந்தனர் .



பச்சை பட்டு உடுத்தி இறங்கியதால் சுபிக்ஷம் பெருகும் என்று மக்கள் மகிழ்ச்சி கொண்டனர் .

Saturday, April 19, 2008

டோனி டாஸ் வின் பண்ணினார் . பேட்டிங் சூஸ் பண்ணினார்.


மொகலியில் நடை பெறும் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கிங்க்ஸ் அணியின் கேப்டன் டோனி பேட்டிங் சூஸ் பண்ணி வெளையடிவருகிறார்கள் . இரண்டாவது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி இருபது ரன்கள் .

Friday, April 18, 2008

அறை எண் முன்னூற்றி ஐந்தில் கடவுள் சினிமா விமர்சனம் .


சும்மா சொல்லக்கூடாது சிம்புதேவன் மீண்டும் ஒரு ஜனரஞ்சகமான குடும்பத்துடன் சென்று பார்க்கும் படியான படத்தை தைரியமாக கொடுத்துள்ளார் .

கதை கற்பனை மிகுந்தது தான்என்றாலும் சுவாரசியமானது .

சென்னை திருவல்லிகேணியில் மேன்சன் ஒன்றில் வசித்து வரும் இரண்டு நண்பர்கள் ஒரு நாள் போதை யில் வெறுப்பு மிகுதியால் கடவுளை நோக்கி திட்ட , கடவுள் அவர்களுக்கு தரிசனம் தந்து அவர்களுடன் ஒரு வாரம் தங்கி அவர்கள் பிரச்னை என்ன என்று கவனிப்பதாக கூறுகிறார் .

அவர் செல்லும் நாள் வந்த அன்று அவரின் பவரினை நண்பர்கள் திருடி , அவர்கள் இருவரும் கடவுள் ஆகிறார்கள் . பின் உழைப்பில் அல்லாது கிடைக்கும் பணத்தின் சிறுமை கண்டு திருந்தி நல்ல தன்னம்பிக்கை உள்ள உழைக்கும் மனிதர்கள் ஆகிறார்கள் .

நண்பர்களாக சந்தானமும் கஞ்சா கருப்பும் வருகிறார்கள்.

இருவருக்கும் நடிக்க நல்ல தீனி . கஞ்சா கருப்பு சவுண்டு கொஞ்சம் கம்மியாக பேசுவதால் வெறுப்பு ஏதும் வரவில்லை (வேறு படங்களில் வருவது போல் )

பிரகாஷ் ராஜ் கடவுளாக வருகிறார் .

எந்த வித ஆபாசமும் இல்லாமல் படத்தை எடுத்ததற்கு சிம்புதேவனுக்கு ஒரு சபாஷ் போடலாம் .

அட்வைஸ் மழையை கொஞ்சம் கொறைச்சு இருக்கலாம் .

Friday, February 15, 2008

முதல் வணக்கம்

அனைத்து வலை உலக நண்பர்களுக்கும் எனது முதல் வணக்கம் .
நாளை முதல் அறுவை தொடங்கும் .