ரஜினி மட்டுமல்ல, அவரை வைத்து ஆரம்பிக்கிற படங்களும்கூட மின்னல் வேகத்தில் நடந்து முடிந்துவிடும். அவ்வளவு ஸ்பீடு.'குசேலன்' படப்பிடிப்பு நேற்றுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் படத்தின் பெரும்பாலான காட்சிகளை மளமளவென முடித்து, வரும் 20ம் தேதி ஆடியோ ரிலீஸ் வரை வந்துவிட்டார் இயக்குனர் வாசு. ஜூன் ஆரம்பத்தில் கேரளாவில் ஒரு பாடல் காட்சி. ஜூன் 3 லிருந்து 15ம் தேதி வரை ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் ஷூட்டிங். அவ்வளவு தான் ஷூட்டிங் ஓவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படம் தயாராவதால், காலையில் சென்னையிலும், மாலையில ஹைதராபாத்திலும் குசேலன் ஆடியோ ரிலீஸ் ஆகிறது. இரண்டு நிகழ்ச்சிக்கும் விழா நாயகர் சாட்சாத், ரஜினியேதான்!
No comments:
Post a Comment