குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா !--- கவியரசு கண்ணதாசன் .
Monday, April 28, 2008
நீல ரத்னக்கல்லில் உலகின் மிகச்சிறிய குரான்
துபாய்: நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரான் வடிவமைக்கப்பட்டுள்ளது.விலை உயர்ந்த நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரானை மிர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.10,000 குரான் வாசகங்கள் இந்த குரானில் பொறிக்கப்பட்டுள்ளன. 58 மி.மீ. அகலமும், 98 மி.மீ. உயரமும் கொண்ட 20 நீல ரத்னக்கல் பட்டிகளில் இந்த வாசகங்கள் வெண்தங்கம் என்றழைக்கப்படும் பிளாட்டினம் உலோகத்தால் எழுதப்பட்டுள்ளன.துபாயில் கடந்த ஏப்ரல் 23 முதல் 26 வரை நடந்த நகை கண்காட்சியில் இந்த குரான்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் விலை தலா 15,000 தினார்களாகும்.இது பற்றி மிர் எண்டர்பிரைசஸ் நிர்வாக மேலாளர் டாக்டர் மிர் மொக்தாரி கூறுகையில், 'மெக்கா' (MEQA - Micro Engineering of Quran as Art) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ரத்னக்கல் குரானை தயாரிக்க 2 வருடங்கள் பிடித்தன.குரான் வாசகங்கள் விரல்களில் பட்டு சேதமடையாமல் இருக்கும் வகையில் அதன்மீது குவார்ட்ஸ் இழை பூச்சு அமைக்கப்பட்டுள்ளது.குரானின் புனிதம் பாதுகாக்கப்படும்வகையில், மிக குறைந்த அளவிலேயே இந்த ரத்னக்கல் குரான்கள் தயாரிக்கப்பட்டன.திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை போற்றும் நினைவுப்பரிசாக இந்த குரான்களை வாங்கி வழங்கலாம் என்றார்.இந்த குரான்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிலுள்ள வாசகங்களை படிப்பதற்கு வசதியாக பூதக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment