Wednesday, June 4, 2008

"ரஜினியின் குசேலன் செப்டம்பரில் ரிலீஸ்


கடந்த வாரம் வெளியான பத்திரிகைச் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது, பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் 'குசேலன்' படமும், கமலின் 'தசாவதாரமும்' ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி, போட்டி போடுகின்றன என்பதுதான். ஆனால், 'தசாவதாரம்' வரும் 13ம் தேதி ரிலீஸ் ஆகி, போட்டியில் முந்திக் கொண்டுள்ளது. 'குசேலன்' படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தாலும், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராவதால், ரிலீஸ் ஆக இன்னும் இரு மாதங்கள் ஆகும். படப்பிடிப்புகள் முடிய ஜூலை ஆகிவிடும் என்ற நிலையில், போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முடிந்து திரைக்குவர செப்டம்பர் ஆகிவிடும் என தகவல்கள் கசிந்துள்ளன.

No comments: