Tuesday, April 29, 2008

மணிரத்னமா, ஷங்கரா? : குழப்பத்தில் ஐஸ்வர்யா ராய்!


ஷங்கர் இயக்கும் ரஜினியின் 'ரோபோ'வுக்கு கால்ஷீட் தருவதா? அல்லது மணிரத்னம் இயக்கும் அபிஷேக்கின் படத்துக்கு தேதிகளை ஒதுக்கீடு செய்வதா..?இத்தகைய குழப்பம் மிகுந்த சூழலில் திணறி வருகிறார், நடிகை ஐஸ்வர்யா ராய்! இவ்விரு படங்களின் படப்படிப்புகளுமே செப்டம்பரில் தொடங்கவுள்ளது. இவற்றில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதால், ஐஸ்வர்யா ராய் மிகுந்த குழப்பத்தில் உள்ளார். தன்னை சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் பக்கம் சாய்வதா அல்லது, தன்னை எட்டாவது உலக அதிசயமாக்கி, 'ஜீன்ஸ்'சுடன் வலம் வரச் செய்த ஷங்கருக்கு கடைக்கண் பார்வையை செலுத்துவதா?'குரு'வுக்குப் பிறகு மணியின் இயக்கத்தில் மீண்டும் கணவர் அபிஷேக்குடன் ஜோடி சேர வேண்டும் (தமிழில் விக்ரமுடன்) என்ற அவாவும் உண்டு. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆவலால் 'ரோபோ'வை வசப்படுத்த வேண்டும் என்ற ஆசையுமுண்டு.இந்தச் சூழலில் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவே முடிவு மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஐஸ், 'ரோபோ' படத்துக்கே முன்னுரிமை கொடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மணி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு தீபிகா படுகோனேக்குச் செல்லவிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளன. ஆனால், இரு பெரும் வாய்ப்புகளையும் நழுவவிட விரும்பாத ஐஸ், தேதிகளில் சரிசெய்ய வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து மணி, ஷங்கர் ஆகிய இருவரிடமும் பேச திட்டமிட்டுள்ளாராம்!

No comments: