சும்மா சொல்லக்கூடாது சிம்புதேவன் மீண்டும் ஒரு ஜனரஞ்சகமான குடும்பத்துடன் சென்று பார்க்கும் படியான படத்தை தைரியமாக கொடுத்துள்ளார் .
கதை கற்பனை மிகுந்தது தான்என்றாலும் சுவாரசியமானது .
சென்னை திருவல்லிகேணியில் மேன்சன் ஒன்றில் வசித்து வரும் இரண்டு நண்பர்கள் ஒரு நாள் போதை யில் வெறுப்பு மிகுதியால் கடவுளை நோக்கி திட்ட , கடவுள் அவர்களுக்கு தரிசனம் தந்து அவர்களுடன் ஒரு வாரம் தங்கி அவர்கள் பிரச்னை என்ன என்று கவனிப்பதாக கூறுகிறார் .
அவர் செல்லும் நாள் வந்த அன்று அவரின் பவரினை நண்பர்கள் திருடி , அவர்கள் இருவரும் கடவுள் ஆகிறார்கள் . பின் உழைப்பில் அல்லாது கிடைக்கும் பணத்தின் சிறுமை கண்டு திருந்தி நல்ல தன்னம்பிக்கை உள்ள உழைக்கும் மனிதர்கள் ஆகிறார்கள் .
நண்பர்களாக சந்தானமும் கஞ்சா கருப்பும் வருகிறார்கள்.
இருவருக்கும் நடிக்க நல்ல தீனி . கஞ்சா கருப்பு சவுண்டு கொஞ்சம் கம்மியாக பேசுவதால் வெறுப்பு ஏதும் வரவில்லை (வேறு படங்களில் வருவது போல் )
பிரகாஷ் ராஜ் கடவுளாக வருகிறார் .
எந்த வித ஆபாசமும் இல்லாமல் படத்தை எடுத்ததற்கு சிம்புதேவனுக்கு ஒரு சபாஷ் போடலாம் .
அட்வைஸ் மழையை கொஞ்சம் கொறைச்சு இருக்கலாம் .
3 comments:
நானும் பார்த்தேன்.காலேஜ் மாணவர்கள் பலர் படம் எதிர்பார்த்தபடி இல்லாததால் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனர்.
வந்து கமெண்ட் எழுதியதுற்கு நன்றி .
அட்வைஸ் ஓவராக பண்ணுவதால் மாணவர்கள் கத்துகிறார்கள் என்று நினைக்கிறேன் .
அன்புடன்
பாஸ்கர்
படமா அது ? இங்க கொஞ்சம் வந்து பாருங்க ...
பதிவு 1
பதிவு 2
அது சரி நமக்கு சொந்த ஊர் அருப்புக்கோட்டையா ?
Post a Comment