குஜராத் கிராமங்களில் மின்தடையே இல்லை: மோடி திட்டம் முழு வெற்றி
ஏப்ரல் 22,2008,01:10
ஆமதாபாத்:குஜராத் மாநில கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சார வினி யோகம் கிடைக்கிறது; இதனால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது; தொழில், வியாபாரம் அதிக அளவில் நடக்கிறது. இது மட்டுமல்ல, நகரங்களில் இருந்து கிராமத்துக்கு மீண்டும் திரும்பு வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராமங்களில் முழு அளவில் மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில்,'ஜோதி கிராம் யோஜனா' என்ற திட்டத்தை, ஆயிரம் கோடி ரூபாய் செலவில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துவங்கி உள்ளார். மின்சார வினியோகத்தை சீரமைப் பது, பழுதில்லாமல் பராமரிப்பது, திருட்டை தடுப்பது ஆகியவை தான் இந்த திட்டத் தின் முக்கிய அம்சங்கள். இதன்படி, 18 ஆயிரம் கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மின்சார வினியோகம் தரப்பட்டு வருகிறது. எல்லா கிராமங்களிலும் மின்சார வசதி களும் செய்யப்பட்டுள்ளன.இதனால், கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருகிறது. குடிசைத்தொழிலாக செய்யப்படும் வைரம் பட்டை தீட்டப்படும் தொழிலை, மீண்டும் கிராமங்களில் செய்ய ஆரம்பித்து விட்டனர்.கிராம மாண வர்களின் கல்வித்திறன் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சாரம் இருப்பதால் அவர் களால் படிக்க முடிகிறது. சிறு தொழில்களும் அதிகரித்து வருகின்றன. மின்சாரம் திருட்டுப் போவதும், வீணாவதும் வெகுவாக குறைந்துள்ளது. அதனால், மின்சார வினியோகத்தில் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது.நகரங்களில், மின்சார வினியோகம் இருக்கிறதுஎன்று போனவர்கள் பலரும் இப்போது மீண்டும் கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 'கிராமங்களுக்கு மின்சார சப்ளை செய்யும் திட்டம் முழு அளவில் வெற்றி அடைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் கிராமங்களில் மின் சப்ளை சரிவர செயல்படாத நிலையில் இங்கு 1மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்படுகிறது' என்று அதிகாரிகள் கூறினர்.
நன்றி
தினமலர்
No comments:
Post a Comment