Sunday, June 15, 2008

" தசாவதாரம்' ஓபனிங் சூப்பர் ''தியேட்டர் முதலாளிகள்


"கமலஹாசனின் தசாவதாரம்", ஓபனிங் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நான்கு நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டதால், சென்னையில் நேற்று அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல்.மு‌ன்பதிவு செய்ய வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு திரையரங்கிலும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். தடியடி நடத்த வேண்டிய அளவுக்கு பெரும் கூட்டம்."சென்னையில் மட்டும் 21 தியேட்டர்ல தசாவதாரம் ரிலீஸாயிகியிருக்கு. அப்படியும் கூட்டத்துக்கு குறைவில்லை. அமேசிங் ஓபனிங். ஆறு நாட்களுக்கான ரிசர்வேஷன் ஏற்கனவே முடிஞ்சிருச்சி" என்றார் சென்னை கமலா திரையரங்கு உரிமையாளர் வள்ளியப்பன். "சும்மா வந்துபோற நடிகர்களுக்கிடையில் கமலின் உழைப்பும் நடிப்பும் பிரமிக்க வைக்குது. இதில் வில்லனாக வர்ற வெள்ளைக்கார கமலைப் பாருங்க. எந்த இடத்திலாவது கமலோட ஜாடை, மேனரிஸம் ஏதாவது தெரியுதா? உண்மையிலேயே ஃபென்டாஸ்டிக் மூவி" என்றார் வள்ளியப்பன்.வெளியே நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது, தமிழ் சினிமா சரித்திரத்தில் தசாவதாரம் சாதனை படைக்கும் என்ற அவரது வார்த்தை உண்மையாகும் என்றே தோன்றியது.
(மூலம் - வெப்துனியா

Wednesday, June 11, 2008

பெட்ரோல் விலை உயர்வினை கிண்டல் செய்து கார்ட்டூன்கள்



பெட்ரோல் விலை உயர்வினை கிண்டல் செய்து திரு "மதி" அவர்களின் கார்ட்டூன் கும்மி . அவசியம் பாருங்கள்

Sunday, June 8, 2008

"சினிமா நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்"

ரஜினிகாந்த் , கமலா ஹசன் உட்பட சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கென்று தனியாக இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த தளங்களில் அந்தந்த நட்சத்திரங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. உங்கள் அபிமான நட்சத்திரங்களின் இணைய தள முகவரிகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.(நன்றி தினமலர் )









நடிகர்கள்










ரஜினிகாந்த்
http://www.rajinikanth.com





சூர்யா
http://www.rssurya.com





விஜய்
http://www.actorvijayonline.com





அப்பாஸ்
http://www.actorabbas.com





விஜயகாந்த்
http://www.indiadirect.com/captain





சரத்குமார்
http://www.rskworld.com





அர்ஜூன்
http://arjun.fanspace.com





பிரபு
http://www.sivaji-prabhu.com





மாதவன்
http://www.rmadhavan.com





விக்ரம்
http://www.chiyaanvikramonline.com





பிரசாந்த்
http://www.prashanthonthenet.com





ஜீவா
http://www.jeeva-online.com/











நடிகைகள்












சிம்ரன்
http://www.simplysimran.com





சினேகா
http://www.priyamudansneha.com





அபிராமி
http://www.abhiramionline.com





ஐஸ்வர்யாராய்
http://www.aishwarya-rai.com





கிரண்
http://www.kiranontheweb.com





லைலா
http://www.laila.net





மீனா
http://www.meenaonthenet.com





ஜோதிகா
http://www.jothikaonline.com





சங்கவி
http://www.sangavi.com





ஸ்வேதா
http://www.swatheonline.com





ஷாலினி
http://www.shalinionline.com





மும்தாஜ்
http://www.mumtazonline.com





ரீமாசென்
http://www.reemasen.com





அசின்
http://www.asinonline.com





ஷெரீன்
http://www.ilamaisherin.com





நமீதா
http://www.namitha.info





மதுமிதா
http://www.madhumitha.com





நிலா
http://www.liveindia.com/meera











இசையமைப்பாளர்கள்












ஹாரிஸ் ஜெயராஜ்
http://www.harrisjayaraj.com/





ஏ.ஆர்.ரஹ்மான்
http://www.arr4music.com/





வித்யாசாகர்
http://vidyasagar.fateback.com/bio.htm











இயக்குனர்கள்












ஷங்கர்
www.directorshankar.com/





பாலா
www.directorbala.com/
நன்றி தினமலர்

Saturday, June 7, 2008

மதுரையில் சுழன்றது சூறாவளி : நொறுங்கியது பள்ளி


மதுரையில் நேற்றுமுன்தினம், சுழன்றடித்த சூறாவளிக் காற்றில் 60 வயது மரம் விழுந்து பள்ளிக் கட்டடம் நொறுங்கியது. பள்ளி முடிந்த நேரம் என்பதால், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பினர். மதுரை ஐராவதநல்லூர் ஆர்.சி., துவக்கப்பள்ளியில் 300 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்றுமுன்தினம் மாலையில் திடீரென பலத்த காற்று வீசியது. சுழன்றடித்த சூறாவளிக்கு சில வீடுகளில் ஓடுகள் பறந்தன. மரங்கள் ஆங்காங்கே முறிந்துவிழுந்தன. ஆர்.சி., பள்ளியின் வளாகத்தில் நின்றிருந்த, 2 வாகை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் ஒரு மரம் கட்டடத்தின் மீது விழுந்து, 3 வகுப்பறைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. மாலை 5 மணிக்கு சம்பவம் நடந்ததால், மாணவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் உயிர்தப்பினர்.நேற்று முன்தினம் முதல், மாணவர்கள் வளாகத்தில் உள்ள சர்ச் மற்றும் மர நிழல்களில் பாடம் படிக்கின்றனர்.

தாளாளர் பாதிரியார் சிப்ரியான் கூறுகையில், "பள்ளி மாலை 4.05மணிக்கு முடிந்துவிட்டது. கடவுள் கிருபையால் சம்பவம் நடந்தபோது, மாணவர்கள் யாரும் வகுப்பில் இல்லாதது அதிர்ஷ்டமே. 2 நிமிடங்களே சுழன்றடித்த காற்றில், இந்த வளாகத்தில் மட்டுமல்ல அருகில் பல மரங்கள் முறிந்துவிழுந்துள்ளன. பக்கத்து வயலில், 27 தென்னை மரங்களும் முறிந்துவிட்டன. சேதம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்' என்றார்.


நன்றி தினமலர்

Wednesday, June 4, 2008

"ரஜினியின் குசேலன் செப்டம்பரில் ரிலீஸ்


கடந்த வாரம் வெளியான பத்திரிகைச் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது, பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் 'குசேலன்' படமும், கமலின் 'தசாவதாரமும்' ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி, போட்டி போடுகின்றன என்பதுதான். ஆனால், 'தசாவதாரம்' வரும் 13ம் தேதி ரிலீஸ் ஆகி, போட்டியில் முந்திக் கொண்டுள்ளது. 'குசேலன்' படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தாலும், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராவதால், ரிலீஸ் ஆக இன்னும் இரு மாதங்கள் ஆகும். படப்பிடிப்புகள் முடிய ஜூலை ஆகிவிடும் என்ற நிலையில், போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முடிந்து திரைக்குவர செப்டம்பர் ஆகிவிடும் என தகவல்கள் கசிந்துள்ளன.

Tuesday, June 3, 2008

"விரைவில் 'ரோபோ'வுக்கு பூஜை!"


வெகு பிரமாண்டமாக பேசப்பட்டாலும் 'சிவாஜி', தி 'லாஸ்' ஆன விவகாரத்தில் ரொம்பவே அப்செட் ஆகியிருந்தார் ஷங்கர். இதனால், 'ரோபோ'வை தனது லட்சியப் படமாக எடுத்துக்காட்ட முடிவு செய்துள்ளார். தற்போது, கதை விவாதம் முடிந்து ஸ்கிரிப்ட்டும் ரெடியாகிவிட்டதால், படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார் ஷங்கர். மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள படபூஜையில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார்கள் பங்கேற்கின்றனர். கதை, பிரமாண்டம், தொழிற்நுட்பம், கிராபிக்ஸ் கலக்கல் என எல்லா விதத்திலும் 'சிவாஜி'யை மிஞ்சும் வகையில் இருக்குமாம் 'ரோபோ'.பூஜை முடிந்ததும், ஒட்டு மொத்த படக்குழுவும் படப்பிடிப்புக்காக அமெரிக்கா பறக்கிறது.