''இந்திரலோகத்தில் அழகப்பன்'' புகட்டிய பாடத்தால், கதாநாயகனாக இனி வலம் வர வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த வடிவேலுவை, ஒரு கதை புரட்டிப் போட்டு மீண்டும் நாயகனாக்கியுள்ளது. குறிப்பாக அவர் கேட்ட கதையில் வரும் கதாப்பாத்திரம் அவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. தனக்கெனவே படைத்த பாத்திரமாகவே கருதியிருக்கிறார். ஒரு தொழில்முறை கொலைக்காரனுக்கு, தான் எதைத் தொட்டாலும் தனக்கே 'ஆப்பு' ஆகிவிடும் நிலை தொடர்கிறது. இதுவே, அக்கதாப்பாத்திரத்திலுள்ள தனித்துவம்! 'மாயாவதி மாரிசன்' தொலைக்காட்சித் தொடரை இயக்கிய ராஜூ ஈஸ்வரன்தான், இந்தச் சிரிப்பு கொலைக்காரனை உருவாக்கியவர்.இப்படத்தை, திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தயாரிக்கிறார்.