Sunday, June 15, 2008

" தசாவதாரம்' ஓபனிங் சூப்பர் ''தியேட்டர் முதலாளிகள்


"கமலஹாசனின் தசாவதாரம்", ஓபனிங் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நான்கு நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டதால், சென்னையில் நேற்று அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல்.மு‌ன்பதிவு செய்ய வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு திரையரங்கிலும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். தடியடி நடத்த வேண்டிய அளவுக்கு பெரும் கூட்டம்."சென்னையில் மட்டும் 21 தியேட்டர்ல தசாவதாரம் ரிலீஸாயிகியிருக்கு. அப்படியும் கூட்டத்துக்கு குறைவில்லை. அமேசிங் ஓபனிங். ஆறு நாட்களுக்கான ரிசர்வேஷன் ஏற்கனவே முடிஞ்சிருச்சி" என்றார் சென்னை கமலா திரையரங்கு உரிமையாளர் வள்ளியப்பன். "சும்மா வந்துபோற நடிகர்களுக்கிடையில் கமலின் உழைப்பும் நடிப்பும் பிரமிக்க வைக்குது. இதில் வில்லனாக வர்ற வெள்ளைக்கார கமலைப் பாருங்க. எந்த இடத்திலாவது கமலோட ஜாடை, மேனரிஸம் ஏதாவது தெரியுதா? உண்மையிலேயே ஃபென்டாஸ்டிக் மூவி" என்றார் வள்ளியப்பன்.வெளியே நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது, தமிழ் சினிமா சரித்திரத்தில் தசாவதாரம் சாதனை படைக்கும் என்ற அவரது வார்த்தை உண்மையாகும் என்றே தோன்றியது.
(மூலம் - வெப்துனியா

5 comments:

பரிசல்காரன் said...

"சும்மா வந்துபோற நடிகர்களுக்கிடையில் கமலின் உழைப்பும் நடிப்பும் பிரமிக்க வைக்குது. இதில் வில்லனாக வர்ற வெள்ளைக்கார கமலைப் பாருங்க. எந்த இடத்திலாவது கமலோட ஜாடை, மேனரிஸம் ஏதாவது தெரியுதா? உண்மையிலேயே ஃபென்டாஸ்டிக் மூவி//

ர்ர்ர்ர்ர்ரிப்பேட்டேஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

பரிசல்காரன் said...

"சும்மா வந்துபோற நடிகர்களுக்கிடையில் கமலின் உழைப்பும் நடிப்பும் பிரமிக்க வைக்குது. இதில் வில்லனாக வர்ற வெள்ளைக்கார கமலைப் பாருங்க. எந்த இடத்திலாவது கமலோட ஜாடை, மேனரிஸம் ஏதாவது தெரியுதா? உண்மையிலேயே ஃபென்டாஸ்டிக் மூவி//

ர்ர்ர்ர்ர்ரிப்பேட்டேஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

rapp said...

யாருங்க வல்லியப்பன்ங்கரவரு? வலைப்பதிவரா?

Bleachingpowder said...

சிவாஜி, குருவி வந்த போதும் இதே தான் சொன்னார்கள் இந்த திரையரங்கு உரிமையாளர்கள்.

அடுத்து குசேலனுக்கும் இதே டயலாக் தான். இவர்கள் சொல்லுவதை பார்த்தால் எல்லா தமிழ் படமுமே சரித்திரம்...உலகதரம்...ஹ்ம்ம்ம்ம்ம்..

தமிழ் பொறுக்கி said...

A சென்டெரில் கமல் என்றுமே நம்பர் ஒன் , ஆனால் b, C சென்டரில் அப்படியல்ல.. எங்கள் ஊரில் எளிதாய் டிக்கெட் வாங்கலாம்.. ரஜினிக்கு இருக்கும் மவுசு கமலுக்கு இல்லை...(நான் கமல் ரசிகன் தான்). கமல் படம் எப்போதும் வாய் மொழி புகழால் தான் ஓடும்..தவிர கமல் காலங்கடந்து யோசிப்பவர்.. உ.ம. குணா, இந்த காலகட்டத்தில் வந்த்ருந்தால் நூறு நாள்...(காதல் கொண்டேன் மாதிரி)