குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா !--- கவியரசு கண்ணதாசன் .
Sunday, September 7, 2008
ரஜினியின் ''எந்திரன்'' இன்று தொடக்கம்!
ரஜினிக்கு 'குசேலன்' தோல்வி, பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. ரஜினி படமே என்றாலும் கதை மற்றும் இன்ன பிற விஷயங்களிலும் கூடுதல் கவனம் தேவை என்பதை இயக்குனர்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.
இதன் எதிரொலிதான், ஷங்கரின் 'ரோபோ' தற்போது 'எந்திரன்'' என பெயர் மாறியதும். 'ரோபோ' ஆங்கில பெயர் என்பதால் வரிச்சலுகை கிடைக்காது. ரஜினி படத்துக்கு வரிச்சலுகை தேவையில்லை என்றாலும், பயம் யாரை விட்டது.
படம் திரைக்கு வந்து, முடிவு எதிர்மறையாகிவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் தான் இந்த பெயர் மாற்றத்தை செய்திருக்கிறார்கள்.
எனினும், 'சிவாஜி'க்கு 'தி பாஸ்' என்று சப்-டைட்டில் வைத்ததுபோல, எந்திரனுக்கு சப்டைட்டிலாக 'தி ரோபோ' என்று வைத்துள்ளனர். இதுவும் கூட கடைசிநேர மாறுதலுக்கு உட்பட்டதாம்.
இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து, 'எந்திரன்' படப்பிடிப்பு பிரேசலில் இன்று தொடங்குகிறது. முதலில் பாடல் காட்சிகளை படம் பிடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர்.
(மூலம் - வெப்துனியா)
Tuesday, September 2, 2008
வீர தளபதி ஜே.கே .ரித்தீஷின் அடுத்த படம் "தில்லு முல்லு"!
'நாயகன்' படத்தின் எதிர்பாராதவெற்றியில் இருந்துமீளாமல் இருக்கும் ஜே.கே.ரித்தீஷ், சூட்டோடு சூடாக அனல் பறக்கும் சில பல திட்டங்களை வகுத்து வருகிறார்.
அதில் ஒன்றுதான், ரஜினி பாணியை பின்பற்றி ரசிகர்கள் எண்ணிக்கையை பலமடங்காக உயர்த்துவது எனபதும்!
ஆம், மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த 'நாயகன்' படத்தின் தலைப்பை பயன்படுத்திய ரித்தீஷ், அடுத்து பயன்படுத்தவிருப்பது ரஜினி படத தலைப்பு.
இதற்கென ரித்தீஷ் தேர்ந்தெடுத்திருப்பது, கே.பாலச்சந்திரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படமான 'தில்லு முல்லு'!
இதோடு நிற்கவில்லை இந்த வீரத்தளபதி (அப்படிதாங்க பட விளம்பரங்கள்ல போடுறாங்க!), இந்த முறை ரஜினியின் மேனரிசங்களையும், ஸ்டைல்களையும் பயன்படுத்தப் போகிறார் என்கிறது அவரது அலுவலக (!!!) வட்டாரம்.
வீரத்தளபதி என்ற அடைமொழி, தில்லுமுல்லுவில் 'டூப்பர் ஸ்டார்' என மாறினாலும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஆச்சரியப்படுவதற்கில்லை!
(மூலம் - வெப்துனியா)
Subscribe to:
Posts (Atom)